Type Here to Get Search Results !

National Digital Library of India

0

National Digital Library of India



National Digital Library of India








NDL-India-வில் National Digital Library of India உள்ள அனைத்து 

தகவல்களும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. அதேசமயம்

World e Book Library, South Asia  Archive, OECD iLibrary, Satyajit Ray Society 

உள்ளிட்டவையும்NDL-India-வில் இணைந்துள்ளன. இவற்றின் 

பெரும்பாலான தகவல்கள் இலவசமாக கிடைத்தாலும், பெரும் 

தொகுப்பைப் பார்வையிடுவதுபதிவிறக்கம்செய்வது, பிரிண்ட் 

எடுப்பது போன்றவை அவற்றின் கொள்கை மற்றும் விதிகளுக்கு 

உட்பட்டதாகும்.


தேசிய டிஜிட்டல் நூலகத்தைப் பயன்படுத்த Personal Computer, Laptop, 

MobilePhoneஇவற்றில்ஏதேனும் ஒன்று, இணைய இணைப்பு இருந்தால் 

மட்டும் போதுமானது. இதற்கென \தனி ஹார்டுவேர் எதுவும் 

கிடையாது. NDL-India தகவல்கள் CD-ROM வடிவில் 

வழங்கப்படுவதில்லை. இந்த நூலகத்தைப் பயன்படுத்த எந்தவித 

கட்டுப்பாடும் இல்லை. தனிநபர்கள், நிறுவனங்களைச் சார்ந்த 

உறுப்பினர்கள்எனஅனைத்து தரப்பினரும், அனைத்து வயதினரும் 

இதில் உறுப்பினராகப் பதிவு பெறலாம். இது முழுக்கமுழுக்க அறிவுப் 

பரவலுக்கான முன்னெடுப்பு என்பதால், இதில் உறுப்பினராகவோ, 

நூலகத்தைப் பயன்படுத்தவோ எந்தவிதக் கட்டணமும் இல்லை.


தனிநபர்கள் NDL-India (https://ndl.iitkgp.ac.in) தளத்தில் சென்று 

செல்லிடப்பேசிஎண் அல்லது மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்து 

தங்களின்சுயவிவரங்களுடன்எந்த வகையான பயனாளர் என்பதைத் 

தெரிவித்து உறுப்பினராகச் சேரலாம். 

NDL-India செயலியை Google Play Store-இல் இருந்து இதுவரை ஒரு 

லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த 

செயலியை iTunesStore-இல்இருந்தும் இலவசமாக பதிவிறக்கம் 

செய்துகொள்ளலாம்.


சர்வதேச அளவில் எத்தனையோ டிஜிட்டல் நூலகங்கள் இருந்தாலும்

ஒற்றை சாளர தேடுதல் முறையில், ஒரே இடத்தில் 24 மணி நேரமும் 

அனைத்து தகவல்களும், அனைத்து வடிவங்களிலும் 

கிடைக்கக்கூடிய கல்வி சார்ந்த ஒரே டிஜிட்டல் நூலகமாக இது உள்ளது.


 


 

Follow On    FACEBOOK    YOUTUBE    TELEGRAM      TWITTER     INSTAGRAM


Post a Comment

0 Comments

Top Post Ad

Below Post Ad