Desktop Instagram-Upload Images From Desktop
இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் அவர்கள் ஷேர் செய்ய விரும்பும் அனைத்து போட்டோக்களையும் மொபைலில் இருந்து மட்டுமே ஷேர் செய்ய முடியும். தற்பொழுது உங்களது போட்டோக்களை நீங்கள் உங்கள் லேப்டாப்பில் இருந்து ஷேர் செய்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட Extension தான் Desktop For Instagram ஆகும். இதனை நீங்கள் உங்கள் லேப்டாப்பில் உள்ள Google Chrome Browser-இல் இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்களது போட்டோக்களை நீங்கள் நேரடியாக லேப்டாப்பில் இருந்து இன்ஸ்டாகிராம்-க்கு ஷேர் செய்து கொள்ளலாம்.
Chrome Webstore சென்றவுடன் அங்குள்ள சர்ச் பாக்ஸில் Desktop For Instagram என்று டைப் செய்து தேடவும். தற்போது திரையில் பல Extension உங்களுக்குக் காட்டப்படும். திரையின் இடது பக்கத்தில் உள்ள "Extension" என்கிற Option கிளிக் செய்யவும். தற்பொழுது Theme அல்லாது Extension மட்டுமே உங்களது திரையில் காண்பிக்கப்படும். இதில் சற்று திரையை Scroll செய்து பார்த்தால் " Desktop For Instagram" Extension காண்பிக்கப்படும். அதனை கிளிக் செய்து அடுத்த பக்கத்தில் உள்ள " Add To Chrome" Option க்ளிக் செய்து உங்களது பிரவுசரில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
How To Use Desktop For Instagram
இன்ஸ்டால் செய்தவுடன் உங்களது பிரவுசரின் மேல் வலது புறத்தில் Desktop For Instagram Extension Icon காட்டப்படும். அதனை கிளிக் செய்தவுடன். நீங்கள் உங்கள் பிரவுசரில் லாகின் செய்திருக்கும் இன்ஸ்டாகிராம் முகப்பு பக்கம் தானாக ஓபன் ஆகி விடும். அதாவது தங்களது ஐடி தானாகவே லாகின் செய்து உங்களது இமேஜ் நீங்கள் ஷேர் செய்வதற்கான பக்கம் காண்பிக்கப்படும். இதில் நீங்கள் உங்களது மொபைலில் நீங்கள் இன்ஸ்டாகிராம் எப்படி பயன்படுத்துகிறீர்கலோ அதேபோன்று இப்பொழுது உங்களது பிரவுசரில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் மிகவும் எளிமையாக உங்களது லேப்டாப்பில் இருந்து உங்கள் போட்டோக்களை நீங்கள் உங்களது ப்ரொபைல் பக்கத்தில் ஷேர் செய்து கொள்ள முடியும். பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் மொபைலில் பயன்படுத்துவதற்கு சிறந்ததாக இருப்பினும் பலரும் அதனை அவர்களது லேப்டாப்பில் பயன்படுத்த முடியவில்லை என்ற பிரச்சினை இந்த Desktop For Instagram Extension பயன்படுத்துவதன் மூலம் சரி செய்யப்படுகிறது.