PMFBY Prime Minister Crop Insurance Program(பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்)
![]() |
PMFBY Prime Minister Crop Insurance Program |
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana, பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா) என்ற பிரதமரின் புதிய வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இழப்பீட்டை சரியாகவும், விரைவாகவும் கிடைக்கச் செய்ய 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கர்நாடக மாநிலம் பெலகாவியில் பிரதமர் மோடி 2016 பெப்ரவரி 18 அன்று தொடங்கி வைத்தார். கரும்பு மற்றும் வாழை உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிர்களுக்கு 5 சதவிகிதமும், காரிஃப் பருவத்தில் பயிரிடப்படும் உணவுப்பயிர்கள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு 2 சதவிகிதம், ராபி பருவத்தில் பயிரிடப்படும் பயிர்களுக்கு 1.5 சதவிகிதம் என காப்புப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
Benefits of the program
1.Insurance can cover post-harvest losses as well.
2.Compensation for submerged crops'
3.Under the existing National Agricultural Insurance Scheme, 'storm damage compensation' was available only to coastal districts. However, the new scheme will provide storm damage compensation to all areas.
4.Farmers had to wait for years to receive compensation under existing crop insurance schemes. But the new plan says compensation will be paid within 30 to 45 days.
5.In case of any damage to the crop due to wind, pest or disease between sowing and harvest, 25% of the total sum assured will be available immediately. Post-harvest losses can also be insured.
திட்டத்தின் பயன்கள்
1.அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளுக்கும் சேர்த்து காப்பீடு செய்ய முடியும்.
2.தண்ணீரில் மூழ்கிய பயிர்களுக்கும் இழப்பீடு உண்டு’
ஏற்கெனவே இருந்த தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் ‘புயல் பாதிப்பு இழப்பீடு’ கடலோர மாவட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், புதிய திட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் புயல் பாதிப்பு இழப்பீடு வழங்கப்படும் .
3.ஏற்கெனவே உள்ள பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களில் இழப்பீடு பெற, விவசாயிகள் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் புதிய திட்டத்தில் 30 முதல் 45 நாட்களுக்குள் இழப்பீடு வழங்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.
4.விதைப்புக்கும் அறுவடைக்கும் இடைப்பட்ட காலத்தில் காற்று, பூச்சி, நோய்த்தாக்குதலால் பயிர்களில் ஏதேனும் பாதிப்புகள் நேர்ந்தால், மொத்தக் காப்பீட்டுத் தொகையில் 25 சதவிகிதம் அப்போதே கிடைக்கும். அறுவடைக்கும்ப் பிந்தைய இழப்புகளுக்கும் காப்பீடு பெறலாம்